ACTORS : 😍 Kannamma 😍Ammu நாட்டுப்புற பாடல் வகைகள் தமிழ் நாட்டார் பாடல்கள் தாலாட்டுப் பாடல் கும்மிப் பாடல்சோபனப் பாடல்நழுங்குப் பாடல்வாழ்த்துப் பாடல்ஒப்பாரிப் பாடல்விளையாட்டுப் பாடல்நையாண்டிப் பாடல்கதைப்பாடல்காதல் பாடல்தொழிற்பாடல்மீனவர் பாடல்நெற்குத்திப் பாடல்ஏற்றப் பாடல்நடவுப் பாடல் தொகு குழந்தையின் அழுகையை நிறுத்தவும், தூங்க வைக்கவும் பாடப்படும் பாட்டு தாலாட்டு (Lullaby) ஆகும். தாலாட்டு நாட்டார் பாடல் வகைகளில் ஒன்று. வாய்மொழி இலக்கியங்களாக வழங்கிவந்த தாலாட்டுக்கள் நாட்டாரியல் ஆய்வாளர்களால் சேகரிக்கப்பட்டுத் தொகுக்கப்பட்டுள்ளன. தாலாட்டுப் பாடல்கள் கிராமிய மக்களின் வாழ்க்கையோடு அவர்களின் உணர்வுகளோடு பின்னிப் பிணைந்த நாட்டுப் பாடல் வகைகளில் ஒன்று. தாலாட்டுப் பாடல்கள் இனிமையான இசையை உடையன. அவ்விசையில் மயங்கி குழந்தை மெய்ம்மறந்து தூங்குகின்றது. "தால்" என்பது நாவைக் குறிக்கும். நாவினால் ஓசை எழுப்பி குழந்தையை உறங்க வைப்பதே தாலாட்டுதல் எனவும் கூறுவர். தாய் தன் குழந்தையை மடியிலோ, தோளிலோ, கைகளிலோ, தொட்டிலிலோ வைத்து ஆட்டிய வண்ணம் தாலாட்டுவதே வழக்கம். ஆராரோ ஆரிரரோ என்ற சந்தத்தின் மூலம் ஓசை எழுப்புவதால் இது ஆராட்டுதல் என்றும் சொல்லபடும். திண்டிவனம் வட்டாரப் பகுதிகளில் தாலாட்டுப் பாடும் பெண்கள் “லுலுலாயி லுலுலாயி” என்று நாவை அசைத்து,குழந்தையின் கவனத்தைத் தம் பக்கம் இழுத்தே பாடலைப் பாடுகின்றனர். பாடலின் இசை ஓரே மாதிரியாக இல்லை. அவரவர் விருபத்திற்கு ஏற்ப நீட்டிப் படுகின்றனர். தாலாட்டின் தொடக்கத்திலும் இடையிலும் முடிவிலும் ராராரோ, ஆராரோ, ஆரிரரோ என்ற பதங்கள் பயன்படுத்தப் படுகின்றன. நீலாம்பரி என்ற இன்பமூட்டும் இராகத்திலேயே தாலாட்டுப் பாடல்கள் பெரும்பாலும் பாடப் படுவதுண்டு. எனினும் யதுகுலகாம்போதி, சகானா, ஆனந்தபைரவி போன்ற இராகங்களிலும் இவை இசைக்கப் படுகின்றன. தாலாட்டுப் பாடல்களில் குழந்தையின் அருமை, அதன் விளையாட்டுப்பொருள்கள், மாமன் பெருமை, குலப் பெருமை போன்றவை கூறப்படுகின்றன. இத்தாலாட்டுப் பாடல்களில் தத்ரூபமான உவமை, உருவக அணிகள் கையாளப்பட்டுள்ளன. கொவ்வை இதழ் மகளே - என் குவிந்த நவரத்தினமே கட்டிப் பசும்பொன்னே - என் கண்மணியே கண் வளராய் என்ற தாலாட்டுப் பாடலில் குழந்தையானது நவரத்தினமாகவும், பசும்பொன்னாகவும், கண்மணியாகவும் உருவகிக்கப்பட்டுள்ளமை படித்து இன்புறத்தக்கது. பக்தி இலக்கியங்களிலும் இறைவனை குழந்தையாக பாவித்து தலாட்டுக்கள் பாடப்பட்டுள்ளன.